மடி சாய்ந்தபோது குளிர்ந்திருந்தது
வெடித்த உதடுகளில் இட்ட வறண்ட முத்தம்
பனித்துகள்கள் படர்ந்திருந்த தரையில்
இறந்துகிடந்த அந்த பிணத்தருகில் குறுகிப் படுத்தான்
ஆளப்படுவதற்கு ஏங்கும் அவன் உடல்
தன் துணையை இழந்தது குறித்து
கவலை எதுவும் கொள்ளவில்லை
நிர்வாண வானம் பிரதிபலித்த நதிகளின்
நீரோட்டத்தில் கரை ஒதுங்கிய சருகுகள்
வறளக் காத்திருக்கும் அவனின் உடல் துளைகள்.
* ஓரான்- Homosexual
**ஓராண்- A Single Man

No comments:
Post a Comment