Monday, March 7, 2011

புறக்கணிப்பின் சுவை


இரத்தம் சிந்தும் இதயங்கள் 



கடந்து போகும் ஆம்புலன்சுகள் 
கரிய தார் சாலையை சிவப்பாகிக் 
கிடக்கும் தலை நசுங்கிய பிரேதங்கள் 

வன்முறை நிறைந்த ஆங்கிலப் படங்கள் 
சித்திரவதையை விளக்கும் சித்திரங்கள் 
இதுவரை பாதித்ததே இல்லை என்னை 

எளிமையாகக் கடந்திருக்கிறேன் 
எதையும் உணர்ந்ததில்லை 

ஆம்  
மரண வலி உணர்ந்ததில்லை நான் 
மரத்துக் கிடந்திருக்கிறேன் 
இன்று வரை!

சிதறுண்ட கண்ணாடித் துகள்கள் 
அறிகின்ற பாதங்கள் 
நெருப்புக் குழம்பின் ஒரு மிடறு 

கோடி சிற்றெறும்புகளின் கொட்டல் 
அறுக்கப்படும் உயிர்நாடி 
பிசுபிசுத்தோடும் வெங்குருதி 

பந்தியின் நடுவில் விரட்டப்படும் அவமானம் 
மணிமேகலையின் மறுப்பு 
விலாவில் செருகிய குறுங்கத்தி 


உயிர் வலியை உணர்ந்தேன் இன்று 
அந்த செல்பேசி அழைப்பு 
நிராகரிக்கப்படும்போது  

புறக்கணிப்பின் சுவை பாகல். 
கசந்து போன இணை 




No comments:

Post a Comment