Thursday, March 3, 2011

வாசகியின் விருப்பம்

'ஆண்டியப்பர் மட்டும் அன்று இரவுக் காட்சிக்குப் போயிருந்தால்'- ஆ.ராசாவுக்கு எதிராக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு இது. எங்கே தெரியுமா? சவுக்கு இணையதளத்தில். 
சுத்தமான, தலித்தியத்தின் எதிரான ஒரு இணையதளமே சவுக்கு! 

எனக்கு ஒரு வாசகி சவுக்கு இணைய தளத்தின் முகவரியை இன்னொரு வாசகியின் மூலம் அனுப்பியிருக்கிறார். பெயர் வேண்டாம்.  படிச்சிட்டு ஆடிப்போயிட்டேன் ஆடி!   அவருக்கு நான் சொல்லும் பதில் இதுதான்!

தயவு செய்து என்னை தி.மு.க. தொண்டன் என்று எண்ண வேண்டாம். அது என்னை அவமதிப்பது போலாகும். தி.மு.கழகத்தின் அடிமட்டத் தொண்டன் முதல் மேல்மட்டத் தலைவர்கள்  வரை அத்தனைபேரின் தரம் என்ன   என்பதை நான் அறிவேன்! இது ஒரு பொதுப்படுத்தப்பட்டக் கருத்து.   

சர்க்காரியா கமிஷன் என்பது மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய ஏற்படுத்தப்பட்ட ஒரு ஆணையம். அதற்கும் கருணாநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். இதனை 'சவுக்கு' ஒரு Quote ஆகப் பயன்படுத்தியது சோகமானது. இது அவர்களின் அறியாமையையேக்  காட்டுகிறது. 

ஒருத்தன் ஒரு பொண்டாட்டி வைத்திருக்கிறானா? ரெண்டு மூணு வைத்திருக்கிறானா? என்பதை ஆராய்வதா இலக்கியம்? வேணும்னா ஒரு பொண்ணு ரெண்டு மூணு புருஷன வச்சிக்கட்டும்- யாரு வேணாம்னா? 

கருணாநிதி, ராசாத்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'என் துணைவியார்' என்றேக் குறிப்பிட்டுள்ளார். மனைவி என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லை. துணைவிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் என ஆராய்வதற்கு நமக்கு நேரமில்லை. அந்த விளக்கங்கள் எல்லாம் நமக்கு அவசியமும் இல்லை. 

இந்து திருமணச் சட்டப்படி ஒரு இந்து தன முதல் மனைவியின் சம்மதத்தோடு இன்னொரு மனைவியை மணமுடிப்பதில் எந்த பிழையுமில்லை. நிற்க! ராசாத்தி மனைவி அல்ல! துணைவி! 

உலகத்தில் எந்த நாட்டின் சட்டமும் வைப்பாட்டி வைத்துக்கொள்வதை  தவறு எனச் சொல்வதே இல்லை. 

'சவுக்கின்' சாதி வெறியர்களுக்கு ராசாத்தியின் இருப்பியல் உறுத்தினால் அவர்கள் கருணாநிதியின் மேல் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி வைத்திருக்கிறார் என வழக்கு போடட்டும்! ஜெயித்துக் காட்டட்டும்! அதை விடுத்து நாற்பது வருடக் கதையை சொல்லப்போனால் அறுபது வருடக்கதையை தூசி தட்டுகிறார்கள்  என்றால் அவர்களின் எண்ணம் கருணாநிதியின் படிமத்தைக் கலைப்பதேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?          
  ராசாத்தியின் சொத்துக்கள், கணக்கில் வரவில்லையா? அதனைப் பற்றிய petition ஒன்றை நேரடி வரித் துறைக்கு 'சவுக்கு' எழுதட்டுமே! 

(கோமளவல்லியின் மேல் தட்சிணாமூர்த்தி  சொத்துக்குவிப்பு வழக்கு போடும்போது, தர்மாம்பாள் மீது வழக்கு போட கோமளவல்லியை தடுத்தது எது? சொத்துக் குவிப்பினை  மிக எளிதாக நிறுவிவிடலாமே!)  

சவுக்கின் கோபத்தை என்னால் உணரமுடிகிறது! இத்தனை வருடங்களாக எழுதி வரும் சவுக்கு இணையதளத்தின் பெருமையை இன்று முளைத்த காளானான நான் தட்டிச் சென்றால் அவர்களுக்குப் பொறுக்குமா? இதையேதான் கருணாநிதியும் செய்தார். தமிழ்த்தலைவன்  எனத் தன்னை நிலை நாட்டியபிறகு நேற்று முளைத்த ஒரு சிறுவன் தன் பெருமையை  தட்டிச்செல்ல  முற்பட்டால் எந்த அரசியல்வாதிதான் பொறுத்துக்கொள்வான்? அதுமட்டுமல்ல! 

அமிர்தலிங்கம்

அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ய வேண்டாம் எனப் புலிகளைப் பொது மேடையிலேயே  கேட்டுக் கொண்டார் கருணாநிதி. ஆனால் நடந்தது என்ன! அன்று மாலையே அமிர்தலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இது புலிகளின்  மேலான கருணாநிதியின் வன்மத்தை அதிகரித்தது. இயல்புதானே! 
இந்த மாதிரியான் அரசியல் வன்மங்களை,  அது மட்டுமல்ல, அரசியல் கொலைகளை புலிகள் புரிந்ததில்லையா? தனக்கு எதிராக, அல்லது தனக்கு முழு ஆதரவு கொடுக்காத புலித் தலைவர்கள் பலரையே பிரபாகரன் கொன்று மாயத்துள்ளார்! இதனையெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது? இந்த வகையில் பார்த்தால் கருணாநிதி செய்தது எந்த வகையில் பிழை?
 கருணாநிதி செய்த மாபெரும் பிழை என்னவென்றால், பிரபாகரனோடு அந்த ஈழத் தமிழர்களெல்லாம் போய்ச் சேரட்டும் எனக் கண்டும் காணாத மௌனியாகிவிட்டதே! பிரபாகரன் மீது மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களின் மீதும் அதீதக் கோபத்தில் இருந்தார் கருணாநிதி! 
("அவர்களும் அந்த பொடியனைத் தானே ஆதரிக்கிறார்கள்! நான் எதற்கு அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்?"
 
புலிகளின் கோரிக்கையான  தனித்தமிழ் ஈழத்தை நானும் ஆதரிக்கிறேன்! சிங்களன் உரிமையை மறுத்தால் தமிழன் தன் உரிமையைத் தானே பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 
 உயிரை எடுத்தால், தமிழ்க்கறி கிடைக்கும் என போர்ட் மாட்டி, ஆட்டுக் கறி போல தமிழனின் கறியை விற்றால் ஆயுதம் தூக்கத்தான் வேண்டும். 
ஆனால் புலிகளின் வழியோ! அய்யகோ! கொடுமை!  எதிரியுடன் போராடுவதை விட்டுவிட்டு சகோதர இயக்கங்களின் தலைவர்களை முதலில் கொன்றொழித்தார்கள். வடக்கு கிழக்கு மாகாணத்தில்  புலிகள்  புரிந்த முஸ்லிம் விரட்டியடிப்புக்கு இன்னும் விளக்கங்கள் இல்லை.

புலிகள் முள்ளிவாய்க்காலில்   மாய்ந்து கொண்டிருக்கும்போது கனிமொழிக்கு போன் செய்தால் வந்த பதில் என்ன தெரியுமா? ' அப்பிடியா! அப்பா தூங்கிட்டிருக்காரு! எழுந்தவுடனே சொல்றேன்!' என்பதுதான்!  அதனை எந்த வகையில் நீங்கள் குற்றம் சாட்ட முடியும்?  சொன்ன பேச்சையெல்லாம் சொல்லும்போது கேட்காமல் இப்போது *** வலிக்கிறதென்றால்  யார் காப்பாற்றுவார்கள்?

'கொலை வாளினை எடடா மிகு 
கொடியோர் செயல் அறவே!' 

என பாரதிதாசன் பாடினார்! உண்மைதான்! ஆனாலும்  மாறுபட்டக் கருத்துடையோரும் கொடியோர் எனக் கருதுவது முறையா?! புலிகளின் தவறு ஆரம்பித்தது அங்கேதான்!  

புலிகளின் வாலாகிய சீமான் போன்ற தற்குறிகள் இங்கே கூவித் திரிகிறார்கள்! தமிழுணர்வைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து, பிறகு தேசிய நீரோட்டத்தில் கலந்து,  தமிழர்களுக்கு துரோகமிழைத்த அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களுக்கும் சீமான் போன்றவர்களுக்கும் ஒரு துளியளவும் வித்தியாசமில்லை. தமிழ்தேசியத்தை ஒலித்து ஒலித்து ஓய்ந்த சங்கின் உடைசல் சீமான்.  பிரபாகரனை கைது செய்வேன் என ஒருநாளும், நான் அவரின் சகோதரி என மறுநாளும், சந்திரிகாவுடன் விருந்து உண்ண இன்னொரு நாளும் காங்கிரசை கைகொடுத்துக் காப்பாற்ற மற்றுமொரு நாளுமாகத்   
திரியும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கத் துடிக்கும் அரசியல் அரைவேக்காடு! கழுத்து நரம்பு புடைக்க மேடையில்  கத்தினால் ஒரு மயிர் கூட உதிராது ஐயா!

வாசகி 'தாவும் மான்' அவர்களே!   சவுக்கு போன்ற சாதி வெறியினைப் பரப்புகின்ற இணையதளத்தைப் படிப்பது ஒரு Intellectual error! அதனை இனிமேல் படிக்காதீர்கள்!
நான் அசிங்கமாக எழுதுகிறேன் என தயவுசெய்து   நினைக்காதீர்கள்! 
நான் உண்மையை மட்டுமே எழுதுகிறேன்! உண்மையை மட்டுமே எழுத எப்போதும் விழைகிறேன்! 

2 comments:

  1. தமிழ் உணர்வு யாருக்கு வேண்டும். தமிழ் உணர்வால் சாதிகள் ஒன்று படப்போவதில்லை. சாதிய வன்முறைகள் குறைந்துவிடப்போவதில்லை, மொழி ஒரு உறவுக்கான கருவியாக மட்டுமே இருந்தால் பிரட்சனைகள் வராது.அடையாளமற்ற வாழ்க்கையே சிறந்தது. மொழியும் வேண்டாம் சாதியும் வேண்டாம் மனிதமே போதும்.

    ReplyDelete
  2. அன்பரே! தமிழுணர்வு தேவைதான்! இல்லையென்றால் தமிழ் என்ற ஒரு மொழியையே தேய்த்து அழித்துவிட ஒரு பெருங்கூட்டம் தயாராக இருக்கிறது!

    இயேசு கிறிஸ்து பேசிய அராமிக் மொழியை இன்று ஒரே ஒருவர் தான் தன் தாய்மொழியாகக் கொண்டுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    நீங்கள் குறிப்பிட்டது போல, மனிதம் எல்லாவற்றைவிடவும், முக்கியமானதுதான் என்றாலும், தமிழுணர்வும் வேண்டும் நண்பரே!

    ReplyDelete