Thursday, May 19, 2011

அடம் பிடிக்கும் கோமளவல்லி (எ) ஜெயலலிதா


என் நண்பர் ஒருவரிடம் தமிழக தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கருத்து கேட்டேன்! அவர் சொன்னார்!

YEAH! IN A WAY, IT IS THE VICTORY OF DEMOCRACY!  என்று.

சரிதான்! எனக்கொன்று புரியவில்லை! இது அ. தி. மு.க. வுக்கு கிடைத்த வெற்றியா? அல்லது தி.மு.க. வுக்கு எதிர்ப்பாக கிடைத்த வெற்றியா?அ.தி. மு.க. வுக்கு ஆதரவாக எனக்கு ஒரு விஷயமும் புலப்படவில்லை! 
தி. மு.க. எதிர்ப்புக்கும் அவ்வாறே!

அ. தி. மு.க. தனது கடந்த ஆட்சியில் செய்தவை என்னென்ன? இரண்டு லட்சம் 
அரசு அலுவலர்களை  தற்காலிகப் பணிநீக்கம் செய்தது, மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டுவந்தது மற்றும் மது விற்பனையை அரசே ஏற்று, பட்டதாரிகளை ஊற்றிக்கொடுக்க வைத்தது  தவிர? (கருணாநிதி, இன்னும் பல பேர்களை நியமித்தார்- நிறைய கடைகளைத் திறந்தார்).

 வேறொன்றும் எனக்கு புலப்படவில்லை. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெயா என்ன செய்தார்?

  • நான்கரை ஆண்டுகளாக கொடை  நாடு சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்தார்.
  • திடீரென்று வெளியே வந்து இரண்டு மாநாடுகளை நடத்தினார்.
  • கருணாநிதி, ஈழப் பிரச்சினையில் கைவிரித்ததை கண்டு ஜெயா,  ஈழம்  மலர  வழி வகுப்போம் எனக் கூவினார்! நிற்க! பாராளுமன்ற தேர்தலின்போது மட்டும். இதே ஜெயாதான் புலிகளின் அரசியல் ஆலோசகரான தமிழ்செல்வனின் மரணத்திற்கு இரங்கல் கவிதையை படித்துவிட்டு over react செய்தது.
  • மூன்று முறை சட்டமன்றத்திற்கு வந்து தன்  ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டுப் போனார். 
இவ்வளவுதான் எனக்குத் தெரிந்து ஜெயா கடந்தப் பத்து வருடங்களாகச் செய்தது.


ஒரு ரூபாய்க்கு அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், கூட்டுறவுக் கடன்கள் ரத்து, அவசர ஆம்புலன்ஸ் சேவை, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் (ரூ. ஒரு லட்சம் வரை), இலவச கலர் டிவி, மழையில் ஒழுகா கான்கிரீட் வீடுகள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை, தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் மீதான தடையை நீக்கி, தடையால் 
பாதிக்கப்பட்டோருக்கு, ஐந்து வருடங்களுக்கு வயது வரம்புச் சலுகை, 
பல சப்-அர்பன் (துணை) நகரங்களை நிர்மாணித்தது, இன்னும் எத்தனையோ செய்த 
கலைஞருக்கு எதிர்கட்சி வரிசையில்  அமரும்  தகுதியைக் கூட தர இந்த தமிழக மக்கள்  தயாராயில்லை! இதுல இன்னொரு பய வேற வரப்போறான்! ஆண்டவா! 

சட்டசபைக்கு வெளியவே பார் கேக்கறானாம் இந்தப் பய!  இன்னும் ஒரே மாசத்துல இந்த ஜந்துவை அம்மா, உதைத்து வெளியே தள்ளிவிடும்! இவன் சினிமாவுல வில்லன உதைக்கிற மாதிரி! (அணுகவும்: டாக்டர் ஐயா அவர்கள்!)  

கலைஞர் தவறே செய்யவில்லை என நான் கூறமாட்டேன்! இலங்கைப் போர்  விவகாரத்தில் குறைந்தபட்சம்-என்னால் இயலாது- எனக் கை விரித்திருந்தால் கூட அது மறக்கப்பட்டிருக்கும். உண்ணாவிரதம், கடிதம் என கபட நாடகம் ஆடியதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  

'SPECTRUM' விவகாரத்தைப் பற்றி நான் எதுவும் எழுதுவதை இல்லை.
அது ஊரே நாறிப் போன, உண்மையில் ஒன்றுமே இல்லாத, ஒன்று. அங்கு ஊழல் என்று ஒன்று நடைபெறவே இல்லை.  இப்படித்தான் தீர்ப்பாகும் பாருங்கள். வளைக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. நேர்மையான தீர்ப்பே அவ்வாறுதான் வரும். ஏனென்றால் TRAI regulations- ல்   உள்ள  Social  cause- Clause ன்  படி  'First Come, First Serve' என்பது  நியாயமே! அங்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம்! சாத்தியமே! ஆனால்
 அதை தண்டிக்க முடியாது!  
மற்றுமொன்று! 'Presumptive Loss' என்ற  ஒரு கருத்தே  தவறானது!   இது எல்லோருக்கும் தெரியும்! சிபிஐ-க்கும் தெரியும்!

அலைக்கற்றை  விவகாரத்தைப் பற்றிய பிரச்சாரத்தை  நம்பி கருணாநிதிக்கு எதிராக வாக்களித்தோம் எனக்கூறும் வாக்காளர்கள் தீர்ப்பு வரும் நாள் அன்று தங்கள் முகத்தை உற்று கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும். எவன் சொன்னாலும் நம்பினேனே நான் ஒரு இளிச்சவாயன்தானே! என தன் பிம்பத்திடம் தானே உரையாடவேண்டும்!


எனக்கென்னவோ, ஈழவிவகாரம்தான் இந்தப் படுதோல்விக்குக் காரணம் எனப் படவில்லை! தமிழன் என்ற அடையாளத்தைத் துறக்க விரும்பும் மக்கள்தான்  கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ்மண்ணில் வாழ்கிறார்கள். இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்! அவ்வாறான மக்கள் ஈழத்தில்கூட உண்டு.  மறுப்போர்கள் தங்கள் மனசாட்சியிடம்தான் கேட்டுக்கொள்ளவேண்டும்.

இருக்கும் ஒண்ணு ரெண்டு பேரும், கத்தி கத்தி ஓஞ்சிப்போய்ட்டாங்க!

அப்படியென்றால் கருணாநிதியின் படுதோல்விக்குக் காரணம் என்ன? குடும்ப ஆட்சியா!?

அட பதர்களா!!! ஆள்றவனுக்கு குடும்பம்-னு                                                                 இருந்தா அதுவும் வரத்தாண்டா செய்யும். இது இங்க மட்டுமில்ல! ஈரான்-ல, ஈராக்ல, பாகிஸ்தான்ல, மன்னர்கள் ஆட்சி  செய்யும் நாடுகள்ல, லிபியாவுல, எகிப்துல, இவ்வளவு  ஏன் அமெரிக்கா-வுல கூட வாரிசு ஆட்சி இருக்கத்தான் செய்யுது! 

ஆமா! ஸ்டாலினுக்கு என்னதான் குறைச்சல். முப்பது வருஷத்துக்கு மேல 
அரசியல்ல இருக்காப்ல! மிசா காலத்துல உதை வாங்கியிருக்கப்ல! இந்த 
அனுபவத்தோட பல நாட்டு அதிபர்கள்கூட இல்லை-ங்கிறது தான் உண்மை!            

 ரவுடியிசம் அதிகமாயிருச்சி! எனக் குற்றம் சாட்டுவோர்களுக்கு ஒன்று சொல்கிறேன்! ஜெயா ஒண்ணும் புதுசா ஆட்சிக்கு வரல! ஏற்கனவே ரெண்டு தடவ பாத்துருக்கோம்! ரவுடிங்க எல்லாம் அந்தம்மா காலத்துல காந்தியாவா இருந்தானுங்க?  எல்லாமும் எல்லா காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது!

கனிமொழி சொத்து வளைச்சிபோட்டுச்சி! அழகிரி அதைப் பண்ணினாரு! இதைப் பண்ணினாரு! அதனால்தான் மாத்தி வோட்டு குத்துனோம்-னு சொல்ற பசங்களுக்கு ஒண்ணு.

வளர்ப்புப் பையன்-னு சொல்லப்பட்டவனுக்கு முன்னூறு கோடி ரூபாய்ல கல்யாணம், ஒவ்வொரு எம்மெல்லேவும் ஒரு வாரத்துக்கு ஒரு கோடி பட்டுவாடா பண்ணியது, லண்டன்-ல ஒன்னு கொடைக்கானல்-ல ஒண்ணுன்னு ஹோட்டல்,    டான்சி நில விவகாரம் இன்னும் இதர பல  ஊழல்கள்- இவையெல்லாம் யார்காலத்தில் நடந்தன?    காலை ஒன்பதே முக்காலுக்கு தினமும் அண்ணா சாலையில் ஐந்து வருடங்களுக்கு போக்குவரத்தை நிறுத்தியது யார் காலத்தில் நிகழ்ந்தது?

கருணாநிதிக்கு குடும்பம் இருக்குது! அவங்க ஊழல் செஞ்சதா குற்றச்சாட்டு வந்தது! அம்மா ஆட்சிக்கு வந்தாச்சு! இனிமே மன்னார்குடி  மாபியா அதை செய்யப் போகுது! இதே மாபியா ஏற்கனவே பத்து வருஷம் கொள்ளை அடிச்சது. எல்லாம் நம்ம மக்களுக்கு
மறந்துட்டுது!  


பிளாட்டோ ஒன்று சொல்வார்! தன்னுடைய 'THE REPUBLIC' என்ற புத்தகத்தில்.

மக்கள் முட்டாள்கள்
கல்கி கூட தனது பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இதையே  சொல்வார்! (நான்காவது பாகம்-       ஆட்சியைப்  பறிகொடுக்கின்ற  கோபத்தில் கரிகாலன்   பெரிய பழுவேட்டையரையரிடம்  கூறும்  வசனம்!)

அரிஸ்டாட்டில்  ஒன்று சொல்வார்! 

'COLLECTIVE WISDOM IS GREATER THAN INDIVIDUAL WISDOM' என்று. 

இதில் நான் யாரை நம்புவது! 

ஜனநாயகத்தின் வெற்றி எனக் கூறிய என் நண்பருக்கு நான் கூறிக்கொள்வது! 
 'இனிமேல் காணுங்கள் நண்பரே! YOU WILL HAVE TO WITNESS ALL THE MANIFESTATIONS OF ARISTOCRACY AND DECAYED FORM OF DEMOCRACY!


புதிதாகக் கட்டிய தலைமைச் செயலகம் ஜெயாவுக்குப் பிடிக்கவில்லையாம்! 
மறுபடியும் அந்த வாடகைக் கோட்டைதான் வேண்டுமாம்!

இதுக்குப் பேருதான் அவாள்  திமிரு!


குறிப்பு!

ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த சில சம்பவங்களான, முன்னூறு கோடி திருமணம், கும்பகோணம் சம்பவம் போன்றவற்றுக்கான புகைப்படங்களை இணையத்தில்  தேடினேன்! எங்கும் கிடைக்கவில்லை! கிடைத்தது, அம்மாவின் போட்டோக்கள்தான்! அதில் சாம்பிளுக்கு ஒன்று!


7 comments:

  1. மாப்பு வச்சாங்கல்ல ஆப்பு. தோத்தத ஒத்துக்கடி...என்ன சப்ப கட்டு...

    எப்படி...எப்படி...
    குடும்பமே ஒக்காந்து கும்மியடிச்சிச்சி அது ஒன்னுமேயில்லையாம்

    ரவுடி ஆட்சி அதுவும் ஒன்னுமே இல்லையாம்

    ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்கவே இல்லையாம் கடைசியில மக்கள் தாம் மூஞ்சியவே பாத்து வெக்கப்படுவாங்களாம்....ஏம்பா ஒன்னுமே இல்லாததுக்குத்தான் ராசா கம்பி எண்ணிகிட்டு இருக்காரா? சிபிஐ விசாரணை சுப்ரீம் கோர்டு இதெல்லாம் பயித்தியக் காரத்தனம்னு சொல்ல வற்ற...ஓம் மூஞ்சிய கண்ணாடியில போயி பாத்துக்கப்பா

    ஸ்டாலின் ரொம்ப அனுபவசாலியாம்பா கேட்டுக்கோங்க...

    சரி ஸ்ட்ரைய்ட்டா ஒன்னு கேக்கிறேன். ஜெயா முன்னாடி அட்டகாசம் பன்னுச்சிதான். அது முடிஞ்சி போனது. ஆனா இப்போ அஞ்சு வருசமா செஞ்சிகிட்டு இருக்கிறது நம்ப பெரிசும் அவங்க குடும்பமும்.

    (வெங்காய விலை எல்லாம் ஏறிருச்சேன்னு கேள்வி கேட்டா பெரியார்கிட்ட போயி கேளுன்னு சொன்னதெல்லாம் இப்போ ஞாபகம் வருது..என்ன ஒரு வாய் கொழுப்பு)

    இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கிற ஆட்சிய விட்டுட்டு யாருக்கு போட்டிருக்கலாம்னு நீயே சொல்லு


    இவ்வளவும் செஞ்சிட்டு திரும்பவும் நீ திமுகவுக்கே ஓட்டு போட்டுருக்கனும்னு சொல்ல வர்ரியா...

    போப்பா கப்பித்தனமா பேசிகிட்டு

    ReplyDelete
  2. 1. குடும்ப ஆட்சி பற்றி கூறுகிறீர்கள்! அதனைப் பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன்! அது மனித இயல்பு!
    ஒரு டாக்டர் தன மகனை டாக்டருக்குத்தான் படிக்க வைப்பார். தன் சந்ததியைப் பெருக்கக் காரணமான அடிப்படை உணர்வு போல
    இதுவும் ஒரு உணர்வு. அவ்வளவே!

    2. ரவுடி ஆட்சி ராஜாஜி காலத்திலிருந்தே இருக்கிறது! ஏதோ அரசாங்கம்தான் ரவுடிகளின் நர்சரி என்பது போல பேசுகிறீர்கள்?
    சென்னை என்ன ரியோ டி ஜெனிரோவாகவா இருந்தது?
    3. அலைக்கற்றை ஊழலைப் பற்றிய உங்களின் விமர்சனத்திற்கு பதிலினை கட்டுரையிலேயே சேர்த்துவிட்டேன்!

    4. ஸ்டாலின் அனுபவசாலிதான் என்று ஜெயலலிதாவேகூட சொல்லுவார்! நீங்கள்தான் மறுக்கிறீர்கள்!

    5. வெங்காயம் ஒரு விவசாயப் பொருள்! இந்தியாவில் விவசாயம் தழைப்பது இரண்டின் அடிப்படையில் மட்டுமே உள்ளது.

    ஒன்று, பருவ மழை!
    இரண்டு, விவசாயியின் புத்தி!

    இங்கு இரண்டுமே கம்மி!

    மழை குறைந்ததற்கோ, விவசாயியின் புத்தி குறைந்ததற்கோ மாநில அரசினை குற்றஞ்சாட்டமுடியாது! அரசு, அதுவும் மத்திய அரசு, அதிக பட்சமாக உர விலையைக் கட்டுப்படுத்தலாம்!
    வேறொன்றும் செய்ய இயலாது!

    வெங்காயம் விலை ஏறியதற்கு காரணம் Cost Push Inflation!
    அதாவது, பொருளின் உற்பத்தி குறைவதனால் விலை ஏறுவது! இந்த உற்பத்தி குறைவுக்கு அரசும் காரணமல்ல!
    கருணாநிதியும் காரணமல்ல!

    இது, இந்த கேணத்தனமான கேள்வியைக் கேட்ட பத்திரிக்கைக்காரனுக்கும் தெரியும். பதிலளித்த கருணாநிதிக்கும் தெரியும்!
    வந்த பதில் சற்று நக்கலானது!

    நீங்கள் தி.மு.க. விரோத நிலைப்பாடு எடுப்பதற்கு இந்த பதிலா ஒரு காரணம்?


    அடக்கடவுளே! இந்த பெருசுக்கு ஏதோ அவரு படித்த சமூகத்துல இருக்கறதா நினைப்பு!
    அதனாலதான் அவரு நகைச்சுவை-ன்னு நெனச்சு சொல்றதெல்லாம் சீரியஸா போகுது!

    ReplyDelete
  3. இளங்கோMay 20, 2011 at 7:50 PM

    //எனக்கென்னவோ, ஈழவிவகாரம்தான் இந்தப் படுதோல்விக்குக் காரணம் எனப் படவில்லை!//தாங்கள் சொல்வது உண்மை.சிலர் எதற்கெடுத்தாலும் இலங்கை தமிழர் பிரச்சினையை கருணாநிதியோடு முடிச்சு போடுகின்றனர்.மத்திய அரசோடு மிக மிக நெருக்கமாக இருந்த தமிழ் நாட்டில் முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆராலும் ஜெயலலிதாவாலும் செய்ய முடியாத ஒன்றை கருணாநிதியால் மட்டும் என்ன செய்து இருக்க முடியும்.அன்றிலிருந்து இன்றுவரை இந்த பிரச்சினையை மைய்யப் படுத்தி தேர்தல் நடைபெறவில்லை.

    ReplyDelete
  4. அப்போ திரும்பவும் திமுக வுக்கே ஓட்டு போட்ருக்கனும்னு சொல்ல வர்ரே....இல்லையா

    ReplyDelete
  5. கண்டிப்பா!! இந்த பேய விட அந்த பிசாசு எவ்வளவோ மேலு!

    ReplyDelete
  6. நீ பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது நீ தி.மு.க வின் நீண்டகால தொண்டன்னு மட்டும் நல்லா தெரியுது.
    நல்லா ஜால்ரா அடிக்கற.. பேசாம நீ முதலமைச்சர் ஆகிவிடு.. நாடு விளங்கி விடும்.

    ReplyDelete