Thursday, April 21, 2011

காதல் போயின் சாதல்

காதல்னா என்னாப்பா!

உயிரும் உயிரும் வழியும் பொழுது, வளையல் விரும்பி நொறுங்கும்  பொழுது, வசதியாக வளைந்து கொடுப்பதா? 
அப்டியா?  

இது இல்லன்னா உலகம் சுத்தாதா? 


காதலைப் பற்றி சினிமா எடுத்து, பாட்டு எழுதி, இலக்கியம் படச்சி மக்களை ரொம்ப கெடுத்து வச்சிருக்கானுங்க இந்த கலை குண்டர்கள்! 

சின்ன வயசு! இளமை ஊஞ்சலாடுது! எதிர்பாலைப் பாத்தா காதல் வரத்தான் செய்யும்! ஆனா அதுதான் காதலா? 

இல்லையா?- பின்ன எதுதான் காதல்? 

எனக்குத் தெரிஞ்சி காதல்னா அது தொடரும் அன்புதான்! வெறும் அன்பு மட்டுமல்ல! இளமையில் காதல் வரலாம். ஆனால் அது முதுமை வரை தொடரும்போதுதான் அது காதல் என அழைக்கப் படவேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் முதுமையில்தான் அது அறியப்படும்.

ஆனா, 

கல்யாணம்-னு ஒரு சடங்க ஏற்படுத்தி, அத விட்டு வெளிய வந்தா சமூகப்புறக்கணிப்புக்கு  ஆளாவாய் என பயமுறுத்தி அதன் மூலமாக தொடருகிறதே குடும்பங்கள் -  அங்கு வாழ்வது காதல் எனக் கொள்ளலாமா? 


இதற்கு யாராவது 'ஆம்' எனக் கூறினால் எப்போதுமே எனக்கு வாயால் சிரிப்பு வருவதில்லை!

இதுக்கு சில தலைப்பிரட்டைகள் கிடந்து குதிப்பான்கள்.    குடும்பத்தில் வாழ்வது காதல் என நாங்கள் சொன்னால்-அது எப்புடி-நீ வாயைத் தவிர மற்ற துவாரங்களில் சிரிப்பாய் என்று!    

 சட்டம்போட்டு தான் மனிதனின் அடிப்படை உணர்வுகளை இந்த சமூகம் தடுக்கவேண்டியிருக்கிறது நண்பனே! BASIC  INSTINCTS !  அந்த மாதிரி எதுவும் சமூகக் கட்டுப்பாடுகள் இல்லையென்றால் எவனும் ஒரு பொண்டாட்டியோட நிக்க மாட்டான். எவளும் ஒரு புருசனோட வாழமாட்டா!

'கண்டதும் காதல்'- என்ற கருத்து சினிமாக்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.  அனேகமாக இதற்கு முன்னோடி- நமது சிற்றிலக்கியமான 'உலா' வே. உலா வர்ற ராசாவ வேடிக்கப் பாக்க நிக்கற பொண்டுங்க எல்லாம், சூடா பெருமூச்சு வுட்டு, பசல படந்து, கை மெலிஞ்சி, அவங்க கை வளையலே கழண்டு விழுற அளவுக்கு ஆயிட்டாங்க! பக்கத்துல நிக்கற அந்த பொண்ணுங்களோட அம்மாக்கள் தங்களோட ரெண்டு கையையும் தூக்கி உலா வர்ற ராசாவப் பாத்து கும்பிடு போட்டாங்களாம். ஏன்னா.... அந்த அம்மாக்களுக்கும் கை வளையல்கள் கழண்டு விழற மாதிரி ஆயிடிச்சாம். 
வெளியத் தெரிஞ்சாக் கேவலம்ல! அதானாம்! 

நான் சொல்லல சாமி! இலக்கியம் சொல்லுது!

கண்டவுடனே வருவது காமம் மட்டுமே! உடனடியாக தனது சேமிப்பைத் தீர்க்கவேண்டும் என்ற வெறி அது! இது இயற்கைதான். ஆனால் அதற்கு காதல் என்ற பெயர் கொடுத்து அதைப் புனிதப்படுத்தி தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளும் செயல்தான் 'கண்டதும் காதல்'.


ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் இணையை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்க முடியுமா?  தினம் ஒரு புதிய முகத்தைக் காட்ட முடியுமா? தினம் ஒரு புதிய திறமையைக் காட்டி  தன் இணையை வியக்கவைக்க முடியுமா? அப்படி முடிந்தால்தான் அந்த இணை தொடரும்- அல்லவா? 

ஒரே இணையுடன் ரொம்பநாள் வாழும்போது, அந்த இணையின் எல்லா விடயங்களும், உடல்மொழிகளும், பிடித்தவை பிடிக்காதவை போன்ற இத்தியாதிகளும், மிகவும் பரிச்சயப்பட்டுப்போகிறது.
இந்த புள்ளி தான் தன் இணை தனக்கு போரடிக்கிறது என்பதை உணரும் புள்ளி. அதையும் மீறி அந்த இணை தொடர வேண்டுமென்றால், உடல் ரீதியான உறவில் வித்தியாசங்கள் வேண்டும். அதையும் மீறி, அந்த இணை தொடரவேண்டும் என்றால், ஒரு அடிநாதமான அன்பு, பிரேமம் வேண்டும். இதைத்தான் நான் காதல் என்கிறேன்! 

ஆனால்,
சமூக வாழ்வில், ஆனால் ஒரு குடும்பம் தொடர எவை எதுவும் அவசியமில்லை.  இணையை ஆச்சர்யப்படுத்த வக்கில்லாத, உடல் உறவில் நாட்டமில்லாத, அத்யந்த அன்பு இல்லாத, ஏராளமான குடும்பங்கள், குடும்பங்களாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 
சட்டம்போட்டுத்தான் குடும்பத்தைத் தொடரவேண்டியிருக்கிறது- என நான் கூறியதில் தவறொன்றுமில்லை என இப்போது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன் ! 
 
சமூக விதி ஒன்று இருக்கிறது. கல்யாணம். 

அந்த விதிப்பினை நீ மீறினாயோ----------- என தன் நடுவிரலை மட்டும் நீட்டி எச்சரிக்கிறது சமூகம். விதி விலக்காக விவாகரத்து இருக்கிறது. 

விவாகத்தை ரத்து செய்துவிட்டு வெளியேறும் ஆண்மகனுக்கு ஒரு கட்டத்தில் இன்னொரு இணை கிடைத்துவிடும். அவ்வளவு சீக்கிரம் பெண்ணுக்குக் கிடைத்துவிடுமா என்ன? 

 காதலின் பெயரால் கஷ்டப்படாதீர்கள் மக்களே! வேண்டுமானால் காமம் எனச் சொல்லி பரத்தமை பழகுங்கள்! உங்களை மன்னிக்கிறேன்! 

விதிகளைப் புகுத்துவதால் தொடரும் குடும்பங்கள் எல்லாம் உடைந்து நொறுங்கட்டும்! 

உண்மைக் காதலைப் போற்றுங்கள்! 

No comments:

Post a Comment